Total Pageviews

Wednesday, February 23, 2011

திருக்குறள் - 14



திருக்குறள் - 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

Monday, February 21, 2011

திருக்குறள் - 13



திருக்குறள் - 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: கடல் நீர் சூழ்ந்த உலகமாயினும், மழை நீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

Wednesday, February 16, 2011

திருக்குறள் - 12


திருக்குறள் - 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. 
பொருள்:  யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தை செய்கிறது.

Thursday, February 10, 2011

திருக்குறள் - 11


திருக்குறள் - 11
-- வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரப் பாற்று.
-- பொருள்:  உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் மழை அமிழ்தம் என போற்றப்படுகிறது. 

இனிது இனிது இந்தியா இனிது.

இனிது இனிது இந்தியா இனிது.
இனிது இனிது இந்தியனாய் பிறத்தல் இனிது.

Wednesday, February 9, 2011

திருக்குறள் - 10


திருக்குறள் - 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:  இறைவன் அடி சேராதவர்கள், வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது.

Tuesday, February 8, 2011

திருக்குறள் - 9


திருக்குறள் - 9
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய், எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.