திருக்குறள் - 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. பொருள்: தனக்கு உவமை இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழி ஏதும் இல்லை.
திருக்குறள் - 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. பொருள்: இறைவன் என்பதற்கரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
திருக்குறள் - 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். பொருள்: மலர் போன்ற மனதில் நிறைந்தவனை பின் பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
திருக்குறள் - 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றான் தொழாஅர் எனின். பொருள்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையானின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.