Thirukural - Thiruvalluvar - Tamil
Total Pageviews
Thursday, May 5, 2011
திருக்குறள் - 36
திருக்குறள் - 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
Friday, April 29, 2011
திருக்குறள் - 35
திருக்குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும்.
Thursday, April 28, 2011
திருக்குறள் - 34
திருக்குறள் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம். மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.
Tuesday, April 26, 2011
திருக்குறள் - 33
திருக்குறள் - 33
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
Monday, April 25, 2011
திருக்குறள் - 32
திருக்குறள் - 32
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள்: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை. அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
Thursday, April 21, 2011
திருக்குறள் - 31
திருக்குறள் - 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: சிறப்பையும் செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
Wednesday, April 20, 2011
திருக்குறள் - 30
திருக்குறள் - 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் புரியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)