திருக்குறள் - 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. பொருள்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தை செய்கிறது.
திருக்குறள் - 11 -- வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரப் பாற்று. -- பொருள்: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் மழை அமிழ்தம் என போற்றப்படுகிறது.
திருக்குறள் - 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். பொருள்: இறைவன் அடி சேராதவர்கள், வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது.
திருக்குறள் - 9 கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய், எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
திருக்குறள் - 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. பொருள்: அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்த சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி மற்றவர்களுக்கு பிற துன்பக் கடலை கடப்பது எளிதான காரியம் அன்று.