Total Pageviews

Tuesday, October 13, 2015

Thirukural - 923 கள்ளுண்ணாமை - ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.

கள்ளுண்ணாமை


Thirukural - 923 கள்ளுண்ணாமை -
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்  சான்றோர் முகத்துக் களி.

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/10/thirukural-923.html

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
மு.வ உரை: 
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
சாலமன் பாப்பையா உரை: 
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.
Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes; 
What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

Thursday, October 1, 2015

Thirukural - 922 - கள்ளுண்ணாமை - உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.



Thirukural - 922 - கள்ளுண்ணாமை - உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்  எண்ணப் படவேண்டா தார்.

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/10/thirukural-922.html

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
மு.வ உரை: 
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
சாலமன் பாப்பையா உரை: 
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.
Translation:
Drink not inebriating draught. Let him count well the cost. 
Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

Saturday, August 15, 2015

Thirukural - 921 - கள்ளுண்ணாமை - குறள் 921: - உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.

கள்ளுண்ணாமை

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/08/921.html

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
மு.வ உரை: 
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
சாலமன் பாப்பையா உரை: 
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
Translation:
Who love the palm's intoxicating juice, each day, 
No rev'rence they command, their glory fades away.
Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

Friday, September 2, 2011

திருக்குறள் - 57


திருக்குறள் - 57 
சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பொருள்: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். 

Thursday, July 21, 2011

திருக்குறள் - 56


திருக்குறள் - 56
தற்காத்துக் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்: கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

Tuesday, July 12, 2011

திருக்குறள் - 55


திருக்குறள் - 55
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்: கணவன் வாக்கினை கடவுள் வாக்கை விட மேலாக கருதும் பத்தினி தெய்வங்கள் பெய்யென்றால் பெய்யும் மழை.

Thursday, July 7, 2011

திருக்குறள் - 54

திருக்குறள் - 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள்: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதை விடப் பெருமைக்குரியது வேறு யாது?

Wednesday, July 6, 2011

திருக்குறள் - 53


திருக்குறள் - 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பொருள்: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.  அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

Tuesday, July 5, 2011

திருக்குறள் - 52

திருக்குறள் - 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கு தனி சிறப்பு கிடையாது.

Monday, July 4, 2011

திருக்குறள் - 51


திருக்குறள் - 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாவாள்.

Tuesday, June 28, 2011

திருக்குறள் - 50

திருக்குறள் - 50
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் உள்ள தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படுவான்.

Thursday, June 23, 2011

திருக்குறள் - 49

திருக்குறள் - 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பொருள்: இல்வாழ்க்கை அறன் எனப் படும். பழிப்புக்கு இடம் இல்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

Tuesday, June 21, 2011

திருக்குறள் - 48


திருக்குறள் - 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விடப் பெருமை உடையதாகும். 

Friday, June 17, 2011

திருக்குறள் - 47


திருக்குறள்  - 47
 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராக திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

Wednesday, June 15, 2011

திருக்குறள் - 46




திருக்குறள் - 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போய்ப் பெறுவ தெவன்.
பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் பெற்றிட இயலுமா?  இயலாது.

Friday, June 10, 2011

திருக்குறள் - 45


திருக்குறள் - 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

திருக்குறள் - 44


திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

Monday, June 6, 2011

திருக்குறள் - 43

திருக்குறள் - 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
பொருள்: வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலைபடுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுகுரியனவாகும்.

Thursday, May 26, 2011

திருக்குறள் - 42


திருக்குறள் - 42
 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பொருள்: பற்றட்ட துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும் பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

Wednesday, May 25, 2011

திருக்குறள் - 41



திருக்குறள் - 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.